TNPSC Thervupettagam

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ல் திருத்தங்கள்

January 30 , 2019 2378 days 2842 0
  • இந்திய தேர்தல் ஆணையமானது (ECI – Election Commission of India) 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள முயல்கிறது.
  • இது தேர்தல் தொடங்குவதற்கு முன்னதான கடைசி 48 மணி நேரங்களுக்கு அச்சு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் வழியாக அரசியல் விளம்பரங்கள் செய்வதற்குத் தடை விதிக்கிறது.
  • 1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 126 ஆனது தேர்தல் தொடங்குவதற்கு முன்னதாக 48 மணி நேரத்திற்கு (அமைதி காலத்தில்) எந்தவொரு மின்னணு ஊடகமும் அரசியல் விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வதைத் தடை செய்கிறது.
  • மேலும் ECI ஆனது கடைசி 48 மணி நேரத்தில் செய்தித் தாள்களில் வெளியிடப்படும் பிரச்சாரத் தகவல்களுக்கு முன் சான்றிதழ் பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்