ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மங்கர்தாம் மலையினைத் தேசிய நினைவுச் சின்னமாகப் பிரதமர் அவர்கள் அறிவித்தார்.
பில் சமூகத்தினர் மற்றும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தின் பிற பழங்குடியினருக்கு மங்கர் மலை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.
மங்கர் மலையில் சுதந்திரப் போராட்டத்தின் போது 1.5 லட்சத்துக்கும் அதிகமான பில் மற்றும் பிற பழங்குடியினர் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் நீண்ட கால மோதலில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்காக கூடிய கூட்டத்தின் மீது ஆங்கிலேயர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 1500 பழங்குடியினர் வீரமரணம் அடைந்ததால், இது மங்கர் படுகொலை என அழைக்கப் படுகின்றது.