கால்நடைகள் மீது அசெக்ளோஃபெனாக் மருந்தினைப் பயன்படுத்தத் தடை
November 7 , 2022 988 days 437 0
இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI) ஆனது எருமைகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படும் அசெக்ளோஃபெனாக் உடலினுள் செலுத்தப்பட்ட பின்பு டைக்ளோஃபெனாக் ஆக மாறுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது.
மேலும், வீட்டு வளர்ப்புக் கால்நடைகளிலும் இதே போன்ற மாற்றங்கள் காணப் படுகின்றன.
எனவே, இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனமானது கால்நடை மீது அசெக்ளோஃபெனாக் மருந்தினைப் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரியது.
அசெக்லோஃபெனாக் மருந்து உட்செலுத்தப்பட்ட அடுத்த 20 நிமிடங்களுக்குள் டிக்ளோஃபெனாக் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டது.
4 முதல் 8 மணி நேரத்திற்குள் டிக்ளோஃபெனாக்கின் செறிவு உச்சத்தை அடைந்தது.
உயிர் வாழ்வதற்காக இந்த கால்நடைகளின் சடலங்களை உண்ணும் கழுகுகளை இது பாதிக்கிறது.
அசெக்லோஃபெனாக் என்பது கால்நடைகள் மற்றும் நாய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கால்நடைகளுக்கான வலி நிவாரணி ஆகும்.
2020-2025 ஆம் ஆண்டு கழுகுப் பாதுகாப்புச் செயல் திட்டமானது அசெக்ளோஃபெனாக் நச்சுத் தன்மை வாய்ந்ததாக கூறுகிறது.