TNPSC Thervupettagam

மங்ரோல் - மூன்றாவது நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் ஆழமற்ற நீர்க்கப்பல்

August 30 , 2026 14 days 85 0
  • இது எட்டு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் ஆழமற்ற நீர்க்கப்பல்களில் (ASW-SWC) மூன்றாவது ஆகும்.
  • அரசுக்குச் சொந்தமான கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) இதை வழங்கியது.
  • குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள மங்ரோல் என்ற கடலோரத் துறைமுக நகரத்தின் பெயர் இதற்குச் சூட்டப்பட்டது.
  • ஆழமற்ற, ஒலிச்சீரற்ற கடலோரப் பகுதிகளில் செயல்படும் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து, கண்காணித்து, தாக்குவதற்காக இது வடிவமைக்கப் பட்டது.
  • இது முன்னணி அழிப்புக் கப்பல்களையும் போர்க்கப்பல்களையும் ஆழ்கடல் நடவடிக்கைகளுக்காக விடுவிக்கும்.
  • செயல்பாட்டு வரம்பு கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கள் வரை இருக்கும்.
  • வேகம் மற்றும் தாங்கும் திறன்: அதிகபட்ச வேகம் 25 நாட்ஸ்; 2 வார செயல்பாட்டுத் தாங்கும் திறன்.
  • ASW-SWC திட்டம், சோவியத் வம்சாவளியைச் சேர்ந்த நான்கு அபய்-வகுப்பு போர்க் கப்பல்களுக்குப் பதிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியப் பெருங்கடல் பகுதியில் (IOR) அதிகரித்து வரும் சீன நீருக்கடியில் நடவடிக்கைகளுக்கு மத்தியில் இது இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்