TNPSC Thervupettagam

மடையான்களின் வலசை

November 25 , 2025 2 days 46 0
  • விசாகப்பட்டினத்தில் உள்ள அறிவியலாளர்கள் வடகிழக்கில் இருந்து தென்மேற்கு நோக்கி நகரும் மடையான்கள் மற்றும் கால்நடை உண்ணிக் கொக்குகளின் வருடாந்திர இரவு நேர வலசைகளை பதிவு செய்துள்ளனர்.
  • இதே போன்ற நிகழ்வு மற்றும் தெற்கு நோக்கிய வலசை முதன்முதலில் 1980 ஆம் ஆண்டுகளில் சென்னையிலும் பின்னர் புதுச்சேரியிலும் இயற்கை ஆர்வலர் V. சாந்த ராமால் பதிவு செய்யப் பட்டன.
  • இது இந்திய மடையான் அல்லது நெல் வயல் நெட்டைக் காலி பறவை (ஆர்டியோலா கிரேயி) என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது ஆர்டீடே (மடையான்கள், உண்ணிக் கொக்குகள் மற்றும் குருகுகள்) என்ற வகை குடும்பத்தைச் சேர்ந்தது.
  • இது ஈரநிலங்கள், குளங்கள், நெல் வயல்கள் மற்றும் மனிதக் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் வாழ்கிறது.
  • இதன் IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியல் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகவும் மற்றும் 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் IV ஆம் அட்டவணையிலும் பட்டிலிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்