மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம் (Central Institute of Brackish water Aquaculture- CIBA) ஆனது தங்க நிறக் கோடு கொண்ட கடல்நீர் மீனின் (ராப்டோசர்கஸ் சர்பா) மரபணுவை வெற்றிகரமாக வரிசைப்படுத்தியுள்ளது.
இது சென்னையின் மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தின் (ICAR-CIBA) ஆராய்ச்சியாளர்களின் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.
இது தமிழில் மட்டி வாயன் என்று உள்ளூர்வாசிகளால் அழைக்கப் படுகின்றது.
இந்தியாவின் மீன் வளர்ப்புத் துறையை விரிவுபடுத்துவதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய இனமாக இந்த இனம் கருதப்படுகிறது.
இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் மீன் உணவுகளில் இந்த இனமும் ஒன்றாக உள்ளதோடு, உள்நாட்டுச் சந்தையில் இதற்கு அதிகத் தேவை உள்ளது.
இது ஒரு யூரிஹலைன் (அதிக உப்புத் தன்மை வேறுபாடுகளைத் தாங்கி வாழும் திறன் கொண்ட உயிரினம்) இனமாகும்.
இது பரந்த அளவிலான உப்புத்தன்மை கொண்ட மீன்களில் மீன் வளர்ப்பு செய்வதற்கான ஒரு வலுவான ஆற்றலைக் கொண்டுள்ளது.