TNPSC Thervupettagam
July 28 , 2025 2 days 17 0
  • லந்தானா கமாரா தற்போது ஓர் ஊடுருவல் அயல் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது (சுற்றுச்சூழல்/பொருளாதாரத் தீங்கு விளைவிக்கும் பூர்வீகமற்ற இனங்கள்).
  • இது ஒரு வெப்ப மண்டல களை இனமாகும் என்பதோடு இது மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதிகளுக்குச் சொந்தமானது.
  • இது முதன்முதலில் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ஓர் அலங்காரத் தாவரமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இமாச்சலப் பிரதேசத்தில், இது தற்போது பதிவு செய்யப்பட்ட வனப்பகுதியில் சுமார் 3,25,282 ஹெக்டேர் (3,252.82 சதுர கி.மீ) பரப்பளவில் பரவியுள்ளது.
  • 2010–11 மற்றும் 2015–16 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஆய்வுகள் தர்ம ஷாலா, நஹான், ஹமீர்பூர், சம்பா, பிலாஸ்பூர், மண்டி மற்றும் சிம்லா ஆகிய ஏழு வன வட்டங்களில் 2,35,491.93 ஹெக்டேர் பரப்பளவில் பரவி இருப்பதைக் காட்டியது.
  • இந்தக் களைச் செடிகள் அடர்த்தியான புதர் வலையமைப்புகளை உருவாக்குகின்றன, என்பதோடு மிகப் பெரும்பாலும் அரிதான மரப் பரவலுடன் இவை வன விளிம்புகளை விஞ்சுகின்றன.
  • லந்தானா தாவர நச்சு வேதிகளை (அலெலோகெமிக்கல்) (வளர்ச்சியைத் தடுக்கும் சேர்மங்கள்) வெளியிடுவதால், அது மற்றத் தாவர இனங்களின் பெரும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் பூர்வீகத் தாவரங்களை அழிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்