TNPSC Thervupettagam

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிப்பு

July 31 , 2025 3 days 28 0
  • மணிப்பூரில் 356வது சரத்தின் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சர் மக்களவையில் அறிமுகப்படுத்திய ஒரு சட்டப்பூர்வத் தீர்மானத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • அரசியலமைப்பின் 356(3) என்ற சரத்தின் கீழ், குடியரசுத் தலைவர் ஆட்சி ஆளுநர் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
  • இது வழக்கமாக ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் மற்றும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் இது புதுப்பிக்கப்படலாம்.
  • இது அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
  • 2027 ஆம் ஆண்டு வரை பதவிக் காலம் கொண்ட மணிப்பூர் மாநிலச் சட்டமன்றம் இடை நிறுத்தம் செய்யப் பட்டுள்ளது.
  • மணிப்பூரின் முதல்வர் N. பிரேன் சிங் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டது.
  • 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் மெய்தே சமூகம் மற்றும் குகி-சோ சமூகங்களுக்கு இடையே இன மோதல் ஏற்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்