பீர்பால் சாஹ்னி பழங்கால அறிவியல் நிறுவனத்தின் (BSIP) அறிவியலாளர்கள் மணிப்பூரின் சிராங் நதியில் சுமார் 37,000 ஆண்டுகள் பழமையான மூங்கில் புதை படிவத்தைக் கண்டறிந்தனர்.
சிமோனோபம்புசா இனத்தைச் சேர்ந்த இந்தப் புதைபடிவத்தில் மூங்கில் புதை படிவங்களில் அரிதாகவே பாதுகாக்கப்படும் அம்சங்களான முள் வடுக்கள், முடிச்சுகள் மற்றும் மொட்டுகள் உள்ளன.
இது பனி யுகத்தின் போது தாவர வகை - பாதுகாப்புப் பண்புகள் இருந்ததைக் காட்டுகின்ற ஆசியாவில் முள் மூங்கில் இருந்ததற்கான ஆரம்ப காலச் சான்று ஆகும்.
ஐரோப்பா போன்ற பகுதிகளில் இருந்து இந்த வகை மூங்கில் மறைந்து விட்டது, அதே நேரத்தில் வடகிழக்கு இந்தியா ஒரு பருவநிலை சார்ந்தப் புகலிடமாக இதற்கு செயல் பட்டதை இந்தக் கண்டுபிடிப்பு குறிக்கிறது.