மத்திய ஆயுதக் காவல் படைகள் (பொது நிர்வாகம்) மசோதா, 2026
March 26 , 2026 15 hrs 0 min 58 0
மத்திய ஆயுதக் காவல் படைகள் (பொது நிர்வாகம்) மசோதா, 2026, மாநிலங்கள் அவையில் அறிமுகப்படுத்தப்பட்டு விரிவான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட வாய்ப்புள்ளது.
அனைத்து மத்திய ஆயுதக் காவல் படைகளிலும் (CAPFs) ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, அயற்பணி மற்றும் சேவை நிபந்தனைகளை நிர்வகிக்கும் விரிவான மற்றும் சீரான சட்டக் கட்டமைப்பை உருவாக்க இந்த மசோதா முயல்கிறது.
தற்போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), ITBP, CISF மற்றும் SSB போன்ற படைகள் தனித்தனி சட்டங்களின் கீழ் செயல்படும் நிலையில் இது கொள்கை முரண்பாடுகள் மற்றும் நிர்வாகத் தாமதங்களுக்கு வழிவகுக்கிறது.
இந்த மசோதா, இந்தியக் காவல் பணி (IPS) அதிகாரிகளின் முறையான அயற்பணியை முன்மொழிகிறது இதனால் இதில் 50% இன்ஸ்பெக்டர் ஜெனரல் (IG) பதவிகள், குறைந்தது 67% கூடுதல் டைரக்டர் ஜெனரல் (ADG) பதவிகள் மற்றும் சிறப்பு டிஜி (Special DG), டிஜி (DG) போன்ற அனைத்து உயர்மட்ட பதவிகளும் அயற்பணி மூலம் நிரப்பப் படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு CAPF அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தச் செய்யலாம்.
பதவி தேக்க நிலை சிக்கல்களைத் தீர்க்கப் பரிந்துரைத்த 2025-ஆம் ஆண்டின் இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுடன் இந்த மசோதா தொடர்புடையது.
தற்போது, இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு, எல்லை மேலாண்மை மற்றும் தேர்தல் பணிகளில் CAPF-கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.