TNPSC Thervupettagam

மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் புதியத் தலைவர்

August 9 , 2022 1072 days 669 0
  • மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் புதியத் தலைவராக நீதிபதி ரஞ்சித் வசந்தராவ் மோரே என்பவரை குடியரசுத் தலைவர் அவர்கள் நியமித்தார்.
  • இவர் மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் ஆவார்.
  • இந்தத் தீர்ப்பாயமானது அரசியலமைப்பின் 323 - A என்ற பிரிவின் கீழ் நிறுவப்பட்டது.
  • அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்ட நபர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பணி நிபந்தனைகள் தொடர்பானச் சர்ச்சைகள் மற்றும் புகார்களைத் தீர்ப்பதற்கு இது வழி வகை செய்கிறது.
  • 323-A என்ற ஒரு சரத்தின் அடிப்படையில் பாராளுமன்றம் ஆனது 1985 ஆம் ஆண்டு நிர்வாகத் தீர்ப்பாயங்கள் சட்டத்தை நிறைவேற்றியது.
  • ஒரு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் மற்றும் மாநில நிர்வாகத் தீர்ப்பாயங்களை நிறுவ மத்திய அரசுக்கு இந்தச் சட்டம் அங்கீகாரம் அளிக்கிறது.
  • இந்தியா முழுவதும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் 19 அமர்வு மையங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்