TNPSC Thervupettagam

மனித உரிமைகள் ஆய்விலிருந்து அமெரிக்கா விலகல்

November 15 , 2026 6 hrs 0 min 22 0
  • ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) திட்டமிடப்பட்ட மனித உரிமைகள் ஆய்வைத் தவிர்க்கும் முதல் நாடாக அமெரிக்கா அமையவுள்ளது.
  • அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஒருதலைப்பட்சமான போக்கு நிலவுவதாகக் கூறி, 2025 ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியது.
  • உலகளாவிய காலமுறை ஆய்வு (UPR) என்பது ஐ.நா.-வின் அனைத்து 193 உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் செயல்பாடுகளையும் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்கிறது.
  • மனித உரிமைகள் ஆணையத்திற்கு மாற்றாக, 2006 ஆம் ஆண்டு மார்ச் 15 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நிறுவப்பட்டது; இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ளது.
  • ஐ.நா. பொதுச் சபையால் மூன்று ஆண்டு பதவிக்காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் 47 உறுப்பு நாடுகளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கொண்டுள்ளது; தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்த உறுப்பு நாடுகள் உடனடியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட முடியாது.
  • இந்தியா 2019–2021 மற்றும் 2022–2024 ஆகிய காலகட்டங்களில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராகப் பணியாற்றியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்