TNPSC Thervupettagam

மனுக்களைத் தீர்ப்பதற்கான காலக்கெடு

October 13 , 2026 9 days 114 0
  • ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் சமர்ப்பிக்கும் மனுக்களைப் பெறுதல், பரிசீலித்தல் மற்றும் தீர்ப்பதற்கு நிர்ணயிக்கப் பட்ட காலக்கெடுவை அனைத்துத் துறைகளும் கண்டிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்களை வழங்குமாறு, தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
  • அரசியலமைப்பின் 350-வது சரத்தின்படி, ஒவ்வொரு நபரும் தனது குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, ஒன்றியத்திலோ அல்லது மாநிலத்திலோ பயன்படுத்தப் படும் எந்தவொரு மொழியிலும், ஒன்றியத்தின் அல்லது மாநிலத்தின் எந்தவொரு அதிகாரி அல்லது அதிகார அமைப்பிடமும் ஒரு மனுவைச் சமர்ப்பிக்க உரிமை உண்டு.
  • குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அதிகாரிகளிடம் மனுவைச் சமர்ப்பிக்கும் உரிமை ஒரு அரசியலமைப்பு உரிமையாகும்.
  • அரசாங்க ஆணைகள், சுற்றறிக்கைகள் மற்றும் அலுவலக கையேடுகள் வடிவில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள், அத்தகைய மனுக்களைத் தீர்ப்பதற்கான கால வரம்புகளை நிர்ணயித்து, அந்த உரிமை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தப்படுவதையும், அதிகாரிகளிடம் கொண்டுவரப்படும் குறைகள் நியாயமான காலத்திற்குள் கையாளப்படுவதையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று நீதிமன்றம் கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்