TNPSC Thervupettagam

மரண தண்டனை பற்றிய உலகளாவிய மறுசீராய்வு

April 25 , 2021 1514 days 760 0
  • சமீபத்தில் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு உலகளாவிய மரண தண்டனை பற்றிய மறுசீராய்வினை வெளியிட்டுள்ளது.
  • அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கையின்படி, 18 நாடுகளில் சுமார் 483 மரண தண்டனைகள் நிறைவேற்றப் பட்டுள்ளன.
  • 2019 ஆம் ஆண்டில், நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை 657 ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை 26%  உயர்ந்துள்ளது.
  • சீனா, ஈரான், எகிப்து, ஈராக் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் என்ற வரிசையில் அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகள் நிறைவேற்றப் பட்டு உள்ளன.
  • 483 தண்டனைகளில் 16 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • அவர்கள் எகிப்து, சவுதி அரேபியா, ஈரான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • இந்தியா, கத்தார், ஓமன் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் மீண்டும் மரண தண்டனையை விதிக்கத் தொடங்கியுள்ளன.
  • ஈரான் நாட்டில் 2019 ஆம் ஆண்டில் 100 ஆக இருந்த மரண தண்டனையின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் பாதியாக குறைந்து 45 ஆக உள்ளது.
  • சவுதி அரேபியாவில் அதன் எண்ணிக்கை 85% குறைந்துள்ளது.
  • சிரச்சேதம், தூக்கிலிடுதல், மின்சார அதிர்வு வழங்குதல், துப்பாக்கிச் சூடு மற்றும் விஷ ஊசி போன்ற மரண தண்டனை விதிக்கும் முறைகளை இந்நாடுகள் பின்பற்றின.
  • ஈரான் நாடு, மூன்று நபர்களுக்கு அவர்கள் 18 வயதிற்கும் குறைவான வயதில் செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதித்து இருந்தது.
  • போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் சீனா, ஈரான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் குறைந்தபட்சம் 30 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளன.
  • இந்தியா, சீனா, வங்க தேசம், வட கொரியா, வியட்நாம், மற்றும் தாய்வான் ஆகிய ஆசிய – பசிபிக் நாடுகள் 2020 ஆம் ஆண்டில் மரண தண்டனைகளை விதித்துள்ளன.
  • பாகிஸ்தான், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் மரண தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை.
  • சீனா உலகளவில் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனை விதிக்கும் நாடாகும்.
  • இருப்பினும் சீனாவில் விதிக்கப்படும் மரண தண்டனைகளின் சரியான எண்ணிக்கை விவரம் தெரிவதில்லை.

குறிப்பு

  • சாத் (Chad) நாடானது எந்தவொரு குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிப்பதை நிறுத்தி விட்டது.
  • மரண தண்டனை விதிப்பதை நிறுத்திய 22வது அமெரிக்க மாநில அரசு கொலராடோ ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்