உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளுக்கு இந்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.
சமீபத்திய இந்த முடிவானது, இந்த முதல் வகையிலான மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிரின் வணிகப் பயன்பாட்டிற்கு வழி வகுத்துள்ளது.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான ஒழுங்குமுறை அமைப்பான மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவானது மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளுக்கு 2017 ஆம் ஆண்டில் அனுமதி வழங்கியது.
ஆனால் இந்திய அரசாங்கம் அது தொடர்பான கேள்விகளை எழுப்பி மேலும் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தச் செய்ததால் அந்தச் செயல்பாடுகளுக்கு மேலும் ஐந்து ஆண்டு காலம் தேவைப்பட்டது.
தற்போது, அரசாங்கம் இதற்கான அவசிய இறுதி அனுமதி அளித்தாலும், விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளை வணிகம் சார்ந்தப் பயன்பாடுகளுக்குப் பயிரிடுவதற்கு இறுதி அனுமதியைப் பெறுவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும்.