தேசிய மிகை இலாபத் தடுப்பு ஆணையம் ஆனது (NAA) இந்தியப் போட்டியியல் ஆணையத்துடன் இணைக்கப்பட உள்ளது.
வரிக் குறைப்புப் பலன்களைப் பெறாதது தொடர்பான வாடிக்கையாளர் புகார்களைக் கையாள்வது தொடர்பான சுமார் 400 வழக்குகள் இதன் முன் நிலுவையில் உள்ள நிலையில் இந்த சரக்கு மற்றும் சேவை வரி கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலம் முடிவடைந்தது.
தேசிய மிகை இலாபத் தடுப்பு ஆணையம் ஆனது 2017 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
இது 2017 ஆம் ஆண்டு மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் 171வது பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டது.
வரி விகிதத்தில் குறைப்பு அல்லது உள்ளீட்டு வரி வரவின் பலன்களானது பெறுநருக்குத் தகுந்த விலைக் குறைப்பு மூலம் வழங்கப்படுவதை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.