மருத்துவ சாதனப் பூங்காத் திட்டம்
March 23 , 2020
1866 days
548
- பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையானது மருத்துவ சாதனப் பூங்காத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தத் திட்டமானது நாட்டில் மருத்துவ சாதனங்களின் உற்பத்தியை (உள்நாட்டுஉற்பத்தி)
- ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மருத்துவ சாதனப் பூங்காக்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
- ஒவ்வொரு பூங்காவும் ரூ.100 கோடி நிதியைப் பெற இருக்கின்றது.
- இந்தப் பூங்காக்கள் மருத்துவச் சோதனைகளின் இறக்குமதியைக் குறைப்பதற்கும் மருத்துவச் சோதனைகளின் தரத்தினை உயர்த்துவதற்கும் உதவ இருக்கின்றன.
- மேலும் இந்தத் திட்டமானது மருத்துவ உற்பத்திப் பொருட்களின் செலவைக் குறைக்க இருக்கின்றது.
- ஆசியாவில் மருத்துவச் சாதனங்களுக்கான 4-வது மிகப்பெரியச் சந்தையாக இந்தியா விளங்குகின்றது.
- இருப்பினும், இந்தியாவில் உள்நாட்டு மருத்துவச் சாதன உற்பத்தித் தொழிற்துறையானது சிறிய அளவிலேயே உள்ளது.
- இந்தியாவின் உள்நாட்டு மருத்துவச் சாதனங்களானது சர்வதேச தொழிற்துறையில் 2% என்ற அளவில் உள்ளது.
Post Views:
548