மேரி E. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளது.
அவர்கள் புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை தொடர்பான ஒரு காரணியைக் கண்டு அறிந்தனர்.
இது நோயெதிர்ப்பு அமைப்பு உடலின் திசுக்களைத் தாக்குவதைத் தடுக்கும் ஒரு முக்கிய வழிமுறையாகும்.
அவர்களின் ஒருங்கிணைந்த ஆராய்ச்சியானது, FOXP3 என்பது ஒழுங்குமுறை T செல்களின் முதன்மை சீராக்கி என்பதை நிரூபித்ததோடு, நோயெதிர்ப்பு சுய சகிப்புத் தன்மையை பராமரிப்பதில் அவற்றின் செயல்பாட்டை உறுதிப்படுத்துகிறது.
இந்தக் கண்டுபிடிப்பானது தற்போது மருத்துவப் பரிசோதனைகளில் உள்ள சில சிகிச்சைகளுக்கும் புற்றுநோய், தன்னுடல் தாக்க நோய்கள் மற்றும் உறுப்பு மாற்று மருத்துவத்தில் புதிய சிகிச்சைகளுக்கும் அடித்தளம் அமைத்துள்ளது.