மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு துணை வேந்தர் நியமனம்
May 13 , 2022 1187 days 690 0
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிப்பதற்குத் தமக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு சட்ட மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்தது.
குஜராத் பல்கலைக்கழகச் சட்டம், 1949 மற்றும் தெலுங்கானா (ஆந்திரப் பிரதேசம்) பல்கலைக் கழகங்கள் சட்டம், 1991 ஆகியவை அந்தந்த மாநில அரசுகளுக்கு துணை வேந்தர்களை நியமிக்க அதிகாரம் அளித்துள்ளன.
தற்போது, மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் திகழ்கிறார்.
ஆளுநர் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று பெயர்களைக் கொண்ட ஒரு குழுவிலிருந்துத் துணைவேந்தர்களை நியமனம் செய்கிறார்.