தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA - National Pharmaceutical Pricing Authority) பட்டியலிடப்படாத 9 புற்றுநோய் மருந்துகளின் விலையை 87 சதவிகிதம் அளவிற்கு குறைத்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அரசாங்கம் 42 புற்றுநோய் மருந்துகளின் விலையை 30 சதவிகித அளவிற்கு குறைத்தது.
NPPA ஆனது 1997 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
இது மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துகள் துறையின் கீழ் செயல்படுகின்றது.
NPPA ஆனது மருந்து விலைக் கட்டுப்பாட்டு விதிகளின்படி (DPCO - Drug Price Control Orders) மருந்துகளின் பட்டியல் மற்றும் அவற்றின் அதிகபட்ச விற்பனை விலை குறித்தப் பட்டியலை வெளியிடுகின்றது.