தேசியக் கல்வி கட்டமைப்பு – 2005ஐ (NCF - National Curriculum Framework) மறு ஆய்வு செய்யத் திட்டமிட்டிருப்பதாக தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆணையத்தின் (NCERT - National Council of Educational Research and Training) இயக்குநர் அறிவித்துள்ளார்.
NCF ஆனது பள்ளிப் பாடத் திட்டத்தை உருவாக்குவதற்கும் பாடப் புத்தகங்களை எழுதுவதற்குமான ஒரு கட்டமைப்பை அளிக்கின்றது.
மேலும் இது இந்தியாவில் கற்பித்தல் நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்குகின்றது.
1975, 1988, 2000 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் நான்கு தேசியக் கல்விக் கட்டமைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளிப் பாடத் திட்டத்தை மறு ஆய்வு செய்வதற்கான பணிக் குழு விரைவில் ஏற்படுத்தப்பட விருக்கின்றது.