மாநிலங்களின் சுகாதார அமைப்பைப் பலப்படுத்தும் நிலைமை மீதான அறிக்கை : 2018 - 2019
October 14 , 2019 2122 days 682 0
சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தால் 2018-2019 ஆம் ஆண்டிற்கான மாநிலங்களின் சுகாதார அமைப்புகளைப் பலப்படுத்தும் நிலைமை மீதான அறிக்கை வெளியிடப் பட்டது.
2018-19ம் ஆண்டில் பல்வேறு சுகாதார அளவீடுகளின் மீதான தங்களது மோசமான செயல்திறன் காரணமாக தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் 14 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, அரியானா, அசாம், கேரளா மற்றும் பஞ்சாப் ஆகியன சிறப்பாகப் பணியாற்றிமையில் முதல் ஐந்து இடத்திலிருக்கும் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களாகும்.
30 வயதிற்கு மேற்பட்ட மக்கட் தொகையினரை முழுமையாக 100 சதவிகிதம் சோதிப்பதில் முதலிடத்தில் தமிழ்நாடும், அதனைத் தொடர்ந்து கோவா (68 சதவிகிதம்) மற்றும் டாமன் & டையூ (57 சதவிகிதம்) ஆகியனவும் உள்ளன.