இராஜஸ்தான் அரசானது மத்தியப் பிரதேசத்தில் உள்ள பென்ச் புலிகள் வளங் காப்பகத்திலிருந்து ஒரு புலியை (Tigress PN-224) கொண்டு வருவதன் மூலம் அதன் மாநிலங்களுக்கு இடையேயான முதலாவது புலி இட மாற்றத்தை மேற்கொள்கிறது.
இது இந்தியாவின் இரண்டாவது புலி இடமாற்றமாகும்.
புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மரபணு பன்முகத் தன்மையை மேம்படுத்தவும் உதவும் வகையில், ராம்கர் விஷதாரி புலிகள் வளங்காப்பகத்திற்கு (RVTR) விமானம் மூலம் புலிகள் கொண்டு செல்லப் படும்.
2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிவிக்கப்பட்ட RVTR ஆனது இராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் உள்ளது என்பதோடு இது ஒரு மைய மற்றும் இடையக மண்டலத்துடன் 1,501.89 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
இந்த வளங்காப்பகம் இரந்தம்போர் புலிகள் வளங்காப்பகம் மற்றும் முகுந்தரா மலைகள் புலிகள் வளங்காப்பகம் இடையே ஓர் இயற்கை வழித்தடத்தை உருவாக்கி, புலிகளின் நடமாட்டத்திற்கு உதவுகிறது.
இந்த இடமாற்றம் ஆனது புதிய வாழ்விடத்தை வலுப்படுத்துவதையும், புலிகள் வளங் காப்புத் திட்டக் குழுவின் கீழ் நீண்ட கால வளங்காப்பை ஆதரிப்பதையும் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
புலிகளை வழங்கும் கொடைத் தளமான பென்ச் புலிகள் சரணாலயம், தேக்கு காடுகள் மற்றும் புலிகள், சிறுத்தைகள் மற்றும் காட்டு நாய்கள் உள்ளிட்ட வளமான வன விலங்குகளுக்குப் பெயர் பெற்றது.
இந்தியாவின் முதல் பெரிய மாநிலங்களுக்கு இடையேயான புலி இடமாற்றம் 2018 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்திலிருந்து ஒரு ஆண் புலி (கன்ஹாவைச் சேர்ந்த மகாவீர்) மற்றும் ஒரு பெண் புலி (பந்தவ்கரைச் சேர்ந்த சுந்தரி) ஒடிசாவின் சட்கோசியா புலிகள் காப்பகத்திற்கு மாற்றப் பட்டு நடந்தது.