PRS சட்ட ஆராய்ச்சி அமைப்பின் 'மாநிலச் சட்டங்களின் வருடாந்திர ஆய்வு' அறிக்கையானது, இந்தியாவில் உள்ள மாநிலச் சட்டமன்றங்களின் செயல்பாடுகளில் உள்ள குறைவான கூட்ட நாட்கள் மற்றும் பலவீனமான சட்டமன்றப் பரிசீலனை உள்ளிட்ட கவலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மாநிலச் சட்டமன்றங்கள் 600-க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்றி உள்ளதாகவும், அதில் கிட்டத்தட்ட 30% மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட அன்றைய தினமே நிறைவேற்றப்பட்டதாகவும், இது விரிவான விவாதம் மற்றும் பரிசீலனையைக் கட்டுப்படுத்துவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
சராசரியாக, மாநிலச் சட்டப்பேரவைகள் சுமார் 24 நாட்கள் மட்டுமே செயல்பட்டு உள்ளன, மேலும் நாகாலாந்து போன்ற சில மாநிலங்கள் ஒரு ஆண்டில் 7 நாட்கள் மட்டுமே கூடியுள்ளன.
சுமார் 5% மசோதாக்கள் மட்டுமே குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்படுவதால், விரிவான சட்டமன்ற ஆய்வு குறைந்து, குழுக்களின் பலவீனமான பரிசீலனையை இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நாடாளுமன்ற விவாதத்திற்குப் பதிலாக நிர்வாகம் சார்ந்த சட்டம் இயற்றுதல் அதிகரித்துள்ளதைக் காட்டும் வகையில், அவசரச் சட்டங்களின் பயன்பாடு (ஆண்டிற்கு 127) அதிகரித்துள்ளதையும் இது குறிப்பிடுகிறது.
பல மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் வரவு செலவுத் திட்ட (பட்ஜெட்) விவாதத்திற்கான குறைந்த நேரம் மற்றும் துணை சபாநாயகர் போன்ற அரசியலமைப்பு பதவிகள் காலியாக இருப்பது குறித்தும் இந்த அறிக்கை கவலைகளை எழுப்பியுள்ளது.