2025 ஆம் ஆண்டின் இந்திய நீதி அறிக்கையானது, அணுகல், தாமதங்கள் மற்றும் பொறுப்புக் கூறல் உட்பட இந்தியாவின் நீதி வழங்கீட்டு அமைப்பில் உள்ள குறிப்பிடத் தக்க சவால்களை எடுத்துரைக்கிறது.
இந்திய நீதித்துறையில் தற்போது 4.57 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற நிலையில் இது நீதி வழங்குவதில் குறிப்பிடத்தக்க தாமதத்தை ஏற்படுத்துகிறது.
மாற்று வழியில் தீர்வு காணும் முறை (ADR) என்பது லோக் அதாலத்கள் மூலம் நடுவர் மன்றம், சமரசம், மத்தியஸ்தம் மற்றும் நீதித்துறை தீர்வு ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்திய அரசியலமைப்பின் 39A சரத்து ஆனது, சம நீதி மற்றும் இலவச சட்ட உதவியை கட்டாயமாக்குவதன் மூலம், ADR முறைக்கான அரசியலமைப்பு அடிப்படையை வழங்குகிறது.
1908 ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் 89வது பிரிவானது, உரிமையியல் தகராறுகளைத் தீர்ப்பதற்காக ADR செயல்முறைகளைப் பயன்படுத்துவதை அங்கீகரித்து ஆதரிக்கிறது.
2021 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட நடுவர் மன்றம் மற்றும் சமரசச் சட்டம், 1996 ஆனது, அதிகபட்சமாக 180 நாட்களுக்குள் தகராறுகளைத் தீர்க்க வேண்டும் என்று கோருகிறது.
1987 ஆம் ஆண்டு சட்ட சேவைகள் ஆணையங்கள் சட்டத்தினால் நிர்வகிக்கப்படும் லோக் அதாலத்கள், மேல்முறையீடு செய்வதற்கான எந்த விருப்பத் தேர்வும் இன்றி இறுதியான மற்றும் பிணைக்கப்பட்ட முடிவுகளை வழங்குகின்றன.
ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் உள்ளன.