மாலுமிகளின் முகம் சார்ந்த பயோமெட்ரிக் தரவைக் கொண்டுள்ள பயோமெட்ரிக் மாலுமி அடையாள ஆவணத்தை (Biometric Seafarer Identity Document - BSID) வெளியிடும் “உலகின் முதலாவது” நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் மன்சுக் மண்டாவியா புது தில்லியில் தொடங்கினார்.
BSIDஐ வழங்குவதற்காக மும்பை, கொல்கத்தா, சென்னை, நொய்டா, கோவா, புதிய மங்களூர், கொச்சி, விசாகப்பட்டினம் மற்றும் காண்ட்லா ஆகிய இடங்களில் ஒன்பது தரவு சேகரிப்பு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
BSIDகள் வழங்கப்பட வேண்டிய மொத்த இந்திய மாலுமிகளின் எண்ணிக்கை சுமார் 3,50,000 ஆகும்.