மாநிலங்களிடமிருந்த மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியின் முழுக் கட்டுப்பாட்டையும் மத்திய அரசு கையகப்படுத்தியுள்ளது.
சுரங்கக் குத்தகைதாரர்கள் வழங்கும் கட்டாயப் பங்கீடுகளிலிருந்துப் பெறப்படும் நிதிகளிலிருந்து எந்தவொருச் செலவினத்திற்காகவும் வேண்டிய நிதியைப் பெறுவதற்கான ஒப்புதலை வழங்குவதற்கான உரிமையை மாநிலங்களிடமிருந்து மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
குறிப்பு
2015 ஆம் ஆண்டு சுரங்கம் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை (திருத்தம்) சட்டமானது சுரங்கம் தொடர்பான செயல்பாடுகளினால் பாதிப்பு அடைந்தவர்களின் நலனுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியினை நிறுவுவதை மாநில அரசுகளுக்குக் கட்டாயமாக்கியுள்ளது.
குத்தகைதாரர்கள் மாநில அரசுகளுக்கு உரிமத் தொகை செலுத்துவதோடு மட்டுமல்லாது அந்த உரிமத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையை இந்த இலாப நோக்கமற்ற அறக்கட்டளைகளுக்கு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்ட கனிம அறக்கட்டளைகளானது சுரங்கம் தொடர்பான செயல்முறைகளினால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பகுதிகளின் நலனுக்காக இந்த நிதிகளைப் பயன்படுத்த வேண்டும்.
பழங்குடியின மக்களே இதன் முதன்மைப் பயனாளிகளாவர்.
இந்தத் திட்டமானது “பிரதான் மந்திரி கானிஜ் சேத்ரா கல்யாண் யோஜனா” எனவும் அழைக்கப் படுகிறது.