இந்த ஆண்டு மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் (ASF) பாதிப்பானது மீண்டும் பதிவாகத் தொடங்கியதால் மிசோரமில் ஏராளமான பன்றிகள் உயிரிழந்தன.
ASF என்பது மிகவும் தொற்று மிக்க மற்றும் உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு விலங்கு நோயாகும் என்பதோடு இது வீட்டு வளர்ப்பு மற்றும் காட்டுப் பன்றிகளில் தொற்றி மிகக் கடுமையான இரத்தக் கசிவுக் காய்ச்சலை ஏற்படுத்துகிறது.
வரலாற்று ரீதியாக, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள், தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் பெருந்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இருப்பினும், 2007 ஆம் ஆண்டு முதல், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில், வீட்டு வளர்ப்பு மற்றும் காட்டுப் பன்றிகளில் இந்த நோய் பதிவாகியுள்ளது.
இதனால் ஏற்படும் இறப்பு விகிதமானது 95% - 100% என்ற அளவினை நெருங்குகிறது என்பதோடு மேலும் இந்தக் காய்ச்சலுக்கு எந்தவித சிகிச்சையும் இல்லாததால், அதன் பரவலைத் தடுப்பதற்கான ஒரே வழி பாதிக்கப்பட்ட விலங்குகளை கொல்வது மட்டுமே ஆகும்.