TNPSC Thervupettagam

மிசோரமில் உள்ள பழமையான குடைவரைத் தளங்கள்

May 3 , 2025 17 days 51 0
  • இந்தியத் தொல்லியல் துறையானது (ASI) மிசோரம் மாநிலத்தில் 4 நூற்றாண்டுகள் பழமையான குடைவரைத் தளங்களைக் கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது.
  • இது 16 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்தினைச் சேர்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • சம்பை, கசௌல், சைத்துவல் மற்றும் செர்ச்சிப்  ஆகிய 4 மாவட்டங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
  • மைட் கிராமத்தில், ஒரு பாறைக் குன்றில் ஒரு சிறிய அளவிலான மனித உருவங்கள், சில விலங்குகள், சேமக் கலம், காயல் எனும் மாட்டினத்தின் தலைகள் மற்றும் சில அடையாளம் கண்டறிய முடியாத சின்னங்கள் ஆகியவற்றால் சூழப்பட்ட ஒரு பெரிய மனித உருவம் காணப் படுகிறது.
  • மிதுன் (போஸ் பிராண்டாலிஸ்) என்பது இந்தப் பகுதியில் காணப்படுகின்ற பகுதியளவு பழக்கப் படுத்தப்பட்ட வளர்ப்பு மாடு ஆகும்.
  • 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்தியத் தொல்லியல் துறை (ASI) ஆனது சம்பை மாவட்டத்தில் உள்ள வாஞ்சியா பகுதியினை அங்கீகரித்தது.
  • இது குடியிருப்புகள் இருந்ததற்கான அறிகுறிகளைக் கொண்ட இடமாக இருந்தது.
  • இது புதியக் கற்காலத்தின் "அழிந்து போன நாகரீகத்துடன்" தொடர்பினைக் கொண்து இருக்கலாம் என்பதோடு இது "வாழ்வியல் வரலாற்று அருங்காட்சியகம்" என்று இங்கு குறிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்