TNPSC Thervupettagam
June 10 , 2026 3 days 100 0
  • "டிஜிட்டல் தளங்களில் தரவு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் மாற்றம்" என்ற பிரிவின் கீழ், 2026 ஆம் ஆண்டிற்கான மின்-ஆளுமைக்கான தேசிய விருதுகளில் பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீடு (PAI) தங்க விருதை வென்றுள்ளது.
  • PAI என்பது நாடு முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளை மதிப்பீடு செய்து தரவரிசைப் படுத்துவதற்காக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட தரவு அடிப்படையிலான தளமாகும்.
  • PAI 2.0 பதிப்பானது, 150-க்கும் மேற்பட்ட குறிகாட்டிகள் மற்றும் 230 தரவுப் புள்ளிகளைப் பயன்படுத்தி 6 லட்சத்திற்கும் அதிகமான கிராம ஊராட்சிகளை மதிப்பீடு செய்கிறது.
  • இது நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குதல் (LSDGs) சார்ந்த 9 கருத்துருக்களின் கீழ் செயல்பாடுகளை அளவிடுகிறது.
  • டிஜிட்டல் ஆளுமையில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிப்பதற்காக 2003 ஆம் ஆண்டு முதல் மின்-ஆளுமைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்