"டிஜிட்டல் தளங்களில் தரவு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் மாற்றம்" என்ற பிரிவின் கீழ், 2026 ஆம் ஆண்டிற்கான மின்-ஆளுமைக்கான தேசிய விருதுகளில் பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீடு (PAI) தங்க விருதை வென்றுள்ளது.
PAI என்பது நாடு முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளை மதிப்பீடு செய்து தரவரிசைப் படுத்துவதற்காக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட தரவு அடிப்படையிலான தளமாகும்.
PAI 2.0 பதிப்பானது, 150-க்கும் மேற்பட்ட குறிகாட்டிகள் மற்றும் 230 தரவுப் புள்ளிகளைப் பயன்படுத்தி 6 லட்சத்திற்கும் அதிகமான கிராம ஊராட்சிகளை மதிப்பீடு செய்கிறது.
இது நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குதல் (LSDGs) சார்ந்த 9 கருத்துருக்களின் கீழ் செயல்பாடுகளை அளவிடுகிறது.
டிஜிட்டல் ஆளுமையில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிப்பதற்காக 2003 ஆம் ஆண்டு முதல் மின்-ஆளுமைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.