இந்தியத்தர நிர்ணய வாரியமானது, மின்சார வாகனத்திற்கான லித்தியம்-அயனி (லி-அயனி) இழுவை மின்கலத் தொகுப்புகள் மற்றும் அமைப்புகளுக்கானச் சோதனை விதிமுறைகளை (செயல்திறன் சோதனை) வெளியிட்டது.
இந்த மின்கலத் தொகுப்புகள் மற்றும் அமைப்புகளுக்கான தரநிலையான IS 17855:2022 என்பது, ISO 12405-4: 2018 என்ற நிலையுடன் இணக்கமாக உள்ளது.
இந்தியத் தர நிர்ணய வாரியம் என்பது நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்தின் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கீழ் செயல்படும் இந்தியாவின் தேசியத் தரநிலை அமைப்பாகும்.
இது 2016 ஆம் ஆண்டு இந்தியத் தர நிர்ணயச் சட்டத்தினால் நிறுவப்பட்டது
இது தரப்படுத்துதல், குறியிடுதல் மற்றும் பொருட்களின் தரச் சான்றிதழ் ஆகிய சில செயல்பாடுகளின் இணக்கமான வளர்ச்சிக்காக உருவாக்கப் பட்டு உள்ளது.
இது சான்றிதழ், தரக்குறியீடு (தங்க நகைகள்), சுற்றுச்சூழல் குறியீடு (சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள்), கட்டாயப் பதிவு (மின்னணு பொருட்களுக்கு) மற்றும் ஆய்வகச் சேவைகளை உள்ளடக்கியது.