TNPSC Thervupettagam

வரைவுப் பொதுச் சட்ட விதிகள் (GSR) அறிவிப்பு

June 29 , 2022 1116 days 486 0
  • பாரத் NCAP என்ற திட்டத்தினை (புதிய மகிழுந்து மதிப்பீட்டுத் திட்டம்) அறிமுகப் படுத்துவதற்கான வரைவுப் பொதுச் சட்ட விதிகளை அறிவிப்பற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.
  • இதன்படி, இந்தியாவில் உள்ள வாகனங்களுக்கு விபத்துச் சோதனைகளில், அவற்றின் செயல்திறன் அடிப்படையில் நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கப் படும்.
  • பாரத்-NCAP என்ற திட்டமானது, வாடிக்கையாளர்கள் மகிழுந்துகளின் நட்சத்திர மதிப்பீடுகளின் அடிப்படையில் பாதுகாப்பான மகிழுந்துகளைத் தேர்வு செய்ய வழி வகை செய்யும் வகையில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய ஒரு தளமாகச் செயல்படும்.
  • இது இந்தியாவில் பாதுகாப்பான வாகனங்களைத் தயாரிப்பதில் நல்ல முறையிலான ஒரு போட்டியை ஊக்குவிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்