மின்சாரத் துறைக்கான இணையப் பாதுகாப்பு விதிகள் 2026
August 19 , 2026 6 days 90 0
மத்திய மின்சார ஆணையமானது (CEA) 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டு மின்சாரத் துறை இணையப் பாதுகாப்பு விதிமுறைகளை அறிவித்து உள்ளதுடன் இது 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த விதிகள், 50 மெகாவாட் (MW) அல்லது அதற்கு மேற்பட்ட கொள்ளளவு கொண்ட மின்சார உற்பத்தி நிலையங்கள், சொந்த மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஆற்றல் சேமிப்பு அமைப்புகள், அத்துடன் மின்சாரப் பரிமாற்றகங்கள் மற்றும் நேரடி வர்த்தகத் தளங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளன.
கணினி பாதுகாப்பு நிகழ்வு மறுமொழி குழு-மின்சாரம் (CSIRT-Power) என்பது இதன் ஒருங்கிணைப்பு முகமையாகும், மேலும் இணையச் சம்பவங்கள் குறித்து இந்திய கணினி அவசர கால மறுமொழி குழுவிற்கும் (CERT-In) தெரிவிக்கப்பட வேண்டும்.
பொதுவான இணையச் சம்பவங்கள் குறித்து ஆறு மணி நேரத்திற்குள்ளும், முக்கியமான அமைப்புகளின் மீதான இணைய நாசவேலைகள் குறித்து 24 மணி நேரத்திற்குள்ளும் தெரிவிக்கப்பட வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப (IT) அமைப்புகளில் இருந்து செயல்பாட்டு தொழில்நுட்ப (OT) அமைப்புகளைப் பிரித்து வைத்திருக்கவும், மின்சாரத் துறை சார்ந்த முக்கிய தரவுகளை இந்தியாவிற்குள்ளேயே பாதுகாப்பாகச் சேமித்து வைக்கவும் இந்த விதிகள் கோருகின்றன.