இந்தியாவின் தேசியத் தொலைமருத்துவச் சேவையான மின்னணு-சஞ்சீவனி (eSanjeevani), அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் 50 கோடி தொலைநிலை மருத்துவ ஆலோசனைகளைக் கடந்துள்ளது.
மின்னணு-சஞ்சீவனி, இந்தியாவின் தேசிய தொலை மருத்துவச் சேவையாக 2019 ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
இது 1.42 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் மையங்கள், 19,000க்கும் மேற்பட்ட மருத்துவ மையங்கள் மற்றும் 901 இணையவழி புறநோயாளிகள் பிரிவுகளை (OPDs) ஆதரிக்கிறது.
இதன் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் மருத்துவ முடிவு ஆதரவு அமைப்பு (AI-CDSS) 2026 ஆம் ஆண்டிற்கான மின்னணு-ஆளுமைக்கான தேசிய விருதுகளின் கீழ் தங்க விருதைப் பெற்றது.
மின்னணு-சஞ்சீவனி, மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தால் (C-DAC) இந்தியாவில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் சுகாதாரத் தீர்வாக உருவாக்கப்பட்டது.