TNPSC Thervupettagam

மின்னணு சொத்து அட்டைகள்

April 28 , 2021 1550 days 706 0
  • சுவாமித்வா திட்டத்தின் கீழ் மின்னணு சொத்து அட்டைகள் (E-Property Cords) வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • இந்த அட்டைகள் தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினக் கொண்டாட்டங்களையொட்டி வழங்கப் பட்டன.
  • சுவாமித்வா திட்டமானது 2020 ஆம் ஆண்டில் தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று தொடங்கப் பட்டது.
  • சுவாமித்வா திட்டம் என்பது கிராமப்புற பகுதிகளில் மேம்பட்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திக் கிராமங்களைக் கணக்கெடுத்தல் மற்றும் வரைபடமிடுதல்,  பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியனவாகும்.
  • இத்திட்டமானது இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் ஒருங்கிணைந்த சொத்து சரி பார்ப்பிற்கான ஒரு தீர்வினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், 2020 மற்றும் 2024 ஆகிய கால கட்டங்களுக்கிடையே வரைபடமிடலானது நிலைவாரியாக (Phase-wise) மேற்கொள்ளப்படும்.
  • இத்திட்டத்தின் கீழ் நிலப்பரப்புகள் ஆளில்லா விமானங்களை (Drones) பயன்படுத்தி வரைபடமிடப் படும்.
  • மேலும் தொடர்ச்சியாக இயங்கும் குறிப்பு வழங்கும் மையங்கள் (Continuously Operating Reference Station – CORS) வரம்புகளை நிர்ணயம் செய்யப் பயன்படுத்தப்படும்.
  • தற்போது இத்திட்டமானது கர்நாடகா, மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் குறிக்கோள்கள்

  • இது கடன் பெறுவதற்கு நிலங்களைச் சொத்துகளாக முன்வைக்கலாம் என்பதால் கிராமப்புற பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிதிநிலைத் தன்மையை வழங்க இயலும்.
  • இது நிலங்கள் பற்றிய தகவல்களை துல்லியமாக பதிவு செய்ய உதவும்.
  • இது சிறந்த கிராம திட்டமிடலுக்கு உதவும்.
  • கிராமப் பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இத்திட்டம் ஆதரவளிக்கும்.
  • கிராமப் பகுதிகளில் சொத்து தொடர்பான தகராறுகளை தீர்க்க இத்திட்டம் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்