TNPSC Thervupettagam

WEF நிறுவனத்தின் உலகளாவிய ஆற்றல் மாற்றக் குறியீடு

April 27 , 2021 1550 days 670 0
  • இக்குறியீடானது ஒரு நிலையான, ஆற்றல்மிகு, எளிதில் அணுகக் கூடிய மற்றும் உள்ளார்ந்த ஆற்றல் முறைக்கு மாறுவதற்கு எந்த அளவிற்குத் தயார் நிலையில் உள்ளன என்று 115 நாடுகளிடையே ஒரு மதிப்பீட்டினை மேற்கொள்கிறது.
  • இக்குறியீடு மூன்று பரிமாணங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
  • அவை பொருளாதார மேம்பாடு மற்றும் வளர்ச்சி, நிலைப்புத் தன்மை, ஆற்றல் மற்றும் உற்பத்தி மற்றும் ஆற்றலை அணுகுவதற்கான குறிகாட்டிகள் ஆகியனவாகும்.
  • 2021 ஆம் ஆண்டின் உலகளாவிய ஆற்றல் மாற்றக் குறியீட்டில் 53 என்ற மதிப்புடன் இந்தியா 87வது இடத்தில் (115 நாடுகளில்) உள்ளது.
  • இக்குறியீடானது உலகப் பொருளாதார மன்றத்தினால் அதன் “2021 ஆம் ஆண்டு திறம் வாய்ந்த ஆற்றல் மாற்றத்தினை மேம்படுத்துதல்எனும் அறிக்கையில் வெளியிடப் படுகிறது.
  • இக்குறியீட்டில் ஸ்வீடன், நார்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் முதல் இடங்களில் உள்ளன.
  • இந்த அறிக்கையானது Accenture நிறுவனத்துடன் இணைந்து உலகப் பொருளாதார மன்றத்தினால் தயாரிக்கப்படுகிறது.
  • இந்த அறிக்கைகையின் 2021 ஆம் ஆண்டு பதிப்பானது திறம் வாய்ந்த ஆற்றல் மாற்ற அறிக்கையின் (ETI – Effective Energy Transition) 10 ஆம் ஆண்டு நிறைவினைக்  குறிக்கிறது.
  • ஆசியப் பகுதியில் மலேசியா முதலிடத்திலும் (13 நாடுகளில்) இந்தியா 9வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்