TNPSC Thervupettagam

இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் வீழ்ச்சி

April 27 , 2021 1549 days 654 0
  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகமானது 2021-21 ஆம் ஆண்டிற்கான தரவுகளை சமீபத்தில் வெளியிட்டது.
  • இந்தத் தரவுகளின் படி, இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியானது 30.5 மில்லியன் டன்களாக குறைந்துள்ளது.
  • 2019-20 ஆம் நிதி ஆண்டில் அதன் உற்பத்தி 32.17  மில்லியன் டன்களாக இருந்தது.

கச்சா எண்ணெய் உற்பத்தி

  • முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020-21 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியானது 5% குறைந்துள்ளது.
  • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமானது 2019-20 ஆம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020-21 ஆம் நிதி ஆண்டில் 2% என்ற அளவிற்குக் குறைவான எண்ணெய்யை உற்பத்தி செய்துள்ளது.
  • 2020-21 ஆம் நிதி ஆண்டில் ONGC நிறுவனம் உற்பத்தி செய்த எண்ணெய்யின் அளவு 20.2 மில்லியன் டன்களாகும்.
  • ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனமானது 5.4% அளவிற்கு குறைவான எண்ணெயையே உற்பத்தி செய்துள்ளது.

இயற்கை எரிவாயு உற்பத்தி

  • 2020-21 ஆம் நிதி ஆண்டில் இயற்கை எரிவாயுவின் உற்பத்தியானது 28.67 பில்லியன் கன மீட்டர்களாக இருந்தது.
  • இது 2019-20 ஆம் ஆண்டு உற்பத்தியை விட 8% குறைவாகும்.
  • இருப்பினும், 2021 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தனது கிருஷ்ணா-கோதாவரி வடிகால் பகுதிகளைச் சார்ந்த எண்ணெய் உற்பத்தி மையங்களில் (KG basinfield) உற்பத்தியைத் தொடங்கியதால் இந்தியாவின் ஒட்டு மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தியானது உயரத் தொடங்கியது.
  • கிருஷ்ணா-கோதாவரி வடிகால் பகுதிகளில் ரிலையன்ஸ் தனது இயற்கை எரிவாயு உற்பத்தியினை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கியது.
  • இப்பகுதியில் தற்போது ஒரு நாளைக்கு 1.3 மில்லியன் கனமீட்டர் அளவுக்கு இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்