யூரியாவிற்கான மானியத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
April 27 , 2021 1548 days 679 0
சமீபத்தில் TFL நிறுவனத்தில் தயாரிக்கவிருக்கும் யூரியாவிற்கு மானியம் வழங்க பொருளாதார விவகாரங்கள் மீதான மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் வழங்கி உள்ளது.
TFL என்றால் தால்செர் உரத் தொழிற்சாலை (Talcher Fertilizer Plant)என்பதாகும்.
TFL என்பது அரசின் கீழ் இயங்கும் ஒரு உரத் தொழிற்சாலையாகும்.
TFL நிறுவனம் ஒடிசாவில் ஒரு புதிய உரத்தொழிற்சாலையைத் தொடங்கவுள்ளது.
இத்தொழிற்சாலையானது நிலக்கரி வளிமமாக்கல் (Coal Gasification) முறையின் மூலம் யூரியாவினை உற்பத்தி செய்யும்.
இத்தொழிற்சாலையினை நிறுவ இந்திய அரசானது மானியம் வழங்குகிறது.
இந்தியாவில் நிலக்கரி வளிமமாக்கல் முறையின் மூலம் மண்ணிற்குத் தேவையான நைட்ரஜன் நிறைந்த ஊட்டச்சத்தினை தயாரிக்கும் ஒரே தொழிற்சாலை இதுவாகும்.
தால்செர் உரத் தொழிற்சாலையானது இந்திய உரங்கள் கூட்டுறவுக் கழகம், ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் பெர்டிலைசர்ஸ் நிறுவனம், GAIL மற்றும் Coal India நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் ஒரு கூட்டு நிறுவனமாகும்.
இத்தொழிற்சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தமானதுசீனாவில் அமைந்துள்ள வுகான் பொறியியல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.