இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் கிரிஷ் சந்திர முர்மூ, (CAG – Comptroller Auditor General) இரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பின் (Organisation for the Prohibition of Chemical Weapons – OPCW) வெளியுறவுத் தணிக்கையாளராக 2021 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு பொறுப்பு ஏற்று உள்ளார்.
இந்த நியமனமானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற OPCW அமைப்பின் அரசுகளின் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் முறைபாடுகளின் போது மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு OPCW அமைப்பின் நிர்வாக சபையின் ஒரு உறுப்பினராக ஆசியப் பகுதியினைப் பிரதிநிதித்துவப் படுத்தச் செய்ய இந்தியா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
OPCW என்பது இரசாயன ஆயுதங்கள் மீதான உடன்படிக்கையை அமல்படுத்தும் ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
இது 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று நடைமுறைக்கு வந்தது.