- சமீபத்தில் ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் கீழ் இயங்கும் ஐ.நாவின் மூன்று அமைப்புகளுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- அவை,
- குற்றத் தடுப்பு மற்றும் நீதி வழங்கும் ஆணையம் (CCPCJ - Commission on Crime Prevention and Criminal Justice)
- பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஐ.நா அமைப்பின் நிர்வாக வாரியம் (ஐ.நா. பெண்கள் அமைப்பு),
- உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக வாரியம் (WFP - World Food Programme) ஆகியவையாகும்.
- இந்த மூன்று அமைப்புகளுக்கும் இந்தியா ஒரு முழுமையான ஒப்புதல் முறையில் (acclamation) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- இந்த ஒப்புதல் முறையில், ஒரு உறுப்பினர் நாட்டினைத் தேர்ந்தெடுப்பதற்கு வாக்கெடுப்புப் பயன்படுத்தப் படுவதில்லை.
- இருப்பினும், மற்ற உறுப்பினர் நாடுகள் இரகசிய வாக்கெடுப்பின் மூலமாகவே இந்த அமைப்பிற்குத் தேர்ந்தெடுக்கப் படுகின்றன.
ஒப்புதல் முறையில் தேர்ந்தெடுத்தல்
- ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எந்தப் பிரச்சினையும் அற்ற (clean slate) ஒரு உறுப்பினர் நாடு தேர்ந்தெடுக்கப்பட முன்மொழியப்படும் போது ஒப்புதல் முறையில் வாக்கெடுப்பு நடத்தப் படும்.
- Clean Slate என்றால் அந்நாட்டின் வரலாற்றில் இதுவரை எந்தவொரு பிரச்சினையுமற்ற அல்லது எந்தவொரு விதிமீறலும் அல்லாத நிலை என்பதாகும்.