மாநில மின் வாரியத்திற்கான மின்சாரக் கட்டண மானியம் மற்றும் உதவித்தொகை வடிவிலான தமிழ்நாடு அரசின் நிதி உதவியானது கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 300% அதிகரித்துள்ளது.
2019-20 ஆம் ஆண்டு முதல், இது சுமார் 137% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த உயர்வு ஆனது ஏற்றத்தாழ்வு இல்லாமல் மிகவும் செங்குத்தாக உயர்ந்துள்ளது.
மானியம் மற்றும் உதவித் தொகையின் அளவு மின் வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 30% ஆகும்.
விவசாயிகளுக்கு மட்டும், இந்த ஆண்டு மானியத் தொகை 8,186 கோடி ரூபாயாக இருக்கும்.
அனைத்து வகைகளுக்கும், கட்டண மானியம் ஆனது சுமார் 16,275 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2025-26 ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட இழப்பு நிதியானது 16,000 கோடி ரூபாயாக இருக்கும்.