மன்னார் வளைகுடாவைச் சுற்றியுள்ள சில மாவட்டங்களில் உள்ள மீனவர்களின் நலனுக்காக சுமார் 216.73 கோடி ரூபாய் மதிப்புள்ள சிறப்பு வாழ்வாதாரத் திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் குண்டுகால் ஆகிய இடங்களில் 360 கோடி ரூபாய்கள் செலவில் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகங்களை உருவாக்குவதாகவும் அவர் அறிவித்து உள்ளார்.
இந்தத் திட்டத்தில் பதப்படுத்துதல் மற்றும் விற்பனை ஆகியவை உட்பட மீன்பிடிச் சமூகத்தினர், கடல் மிதவைக் கூண்டு மீன் மற்றும் நண்டு வளர்ப்பில் ஈடுபட உதவும் வகையில் உபகரணங்கள் மற்றும் ஆதரவுச் சேவைகள் வழங்கப்படும்.