TNPSC Thervupettagam

மீன் கழிவு அடிப்படையிலான உயிரி உரங்கள்

June 7 , 2026 9 days 78 0
  • சென்னையைத் தளமாகக் கொண்ட ICAR-CIBA (இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை - மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம்) அறிவியலாளர்கள் மீன் கழிவுகளிலிருந்து இரண்டு மண்ணுக்கு உகந்த உயிரி உரங்களை உருவாக்கியுள்ளனர்.
  • CIBA-Plankton Plus மற்றும் CIBA-Horti Plus ஆகிய இந்த இரண்டு தயாரிப்புகளும் முழுமையாக மீன் சந்தைக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
  • இந்த கண்டுபிடிப்பு மீன் கழிவுகளை அகற்றும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதையும், ரசாயன உரங்கள் மீதான நுகர்வைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியா ஆண்டுதோறும் சுமார் 195 லட்சம் டன் மீன்களை உற்பத்தி செய்கிறது, இதன் மூலம் 60 லட்சம் டன்னுக்கும் அதிகமான மீன் கழிவுகள் உருவாகின்றன.
  • CIBA-Plankton Plus ஆனது மீன் மற்றும் இறால் உற்பத்தியை மேம்படுத்தியதுடன், அவற்றின் உயிர்வாழும் விகிதத்தை அதிகரித்தது மற்றும் தீவனத் தேவைக் குறைத்தது என்பது கள ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
  • CIBA-Horti Plus ஆனது உருளைக்கிழங்கு விளைச்சலை 23.8% வரை அதிகரித்தது, மண் வளத்தை மேம்படுத்தியது மற்றும் DAP (டைஅம்மோனியம் பாஸ்பேட்) உரத்தின் தேவையைக் குறைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்