இந்திய அரசானது நாட்டின் முதன்மை ஆற்றல் கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை தற்பொழுதுள்ள 6.2% என்ற அளவிலிருந்து 2030 ஆம் ஆண்டில் 15% அளவிற்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி அவர்கள் ”ஒரு நாடு ஒரு எரிவாயுத் தொடர்” என்பதனை அறிவித்தார்.
இதன் கீழ், இந்தியாவானது 17,000 கிலோ மீட்டர் எரிவாயு குழாய்த் தொடரை அமைப்பதன் மூலம் இயற்கை எரிவாயுத் தொடரை விரிவாக்கம் செய்ய உள்ளது.