கோவிட் நோய்த் தொற்று காலத்தில் மிகவும் உதவிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP)
December 29 , 2020 1611 days 579 0
இது புதுதில்லியை தளமாகக் கொண்ட ஒரு குடிமக்கள் பங்கெடுப்புத் தளமான ஆளுகை கணகாணிப்பு என்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வாகும்.
இது இந்த ஆண்டில் பொது முடக்கத்தின் போது தங்களது தொகுதிகளில் அதிக அளவிலான உதவிகளைச் செய்த முக்கியத் தலைவர்கள் பற்றி ஒரு ஆய்வு செய்து உள்ளது.
பிஜேபி கட்சியின் உஜ்ஜயின் தொகுதி MP அனில் பிரோஜியா, ஒய்எஸ்ஆர்சிபி கட்சியின் நெல்லூர் தொகுதி MP அதாலா பிரபாகர ரெட்டி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி MP ராகுல் காந்தி ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.
முதல் 10 MPக்கள் பின்வருமாறு
அனில் பிரோஜியா (பிஜேபி)
அதாலா பிரபாகர ரெட்டி (ஒய்எஸ்ஆர்சிபி)
ராகுல் காந்தி (காங்கிரஸ்)
மகுவா மொய்த்ரா (டிஎம்சி)
எஸ்.எஸ். தேஜஸ்வி சூர்யா (பிஜேபி)
ஹேமந்த் துக்காராம் கோட்சே (சிவ சேனா)
சுக்பீர் சிங் பாதல் (எஸ்ஏடி)
சங்கர் லால்வானி (பிஜேபி)
டாக்டர் டி சுமதி என்ற தமிழச்சி தங்க பாண்டியன் (திமுக)