TNPSC Thervupettagam

முதலமைச்சர் கிசான் கல்யாண் யோஜனா - மத்தியப் பிரதேசம்

August 20 , 2025 2 days 9 0
  • மத்தியப் பிரதேச ஆளுநர் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், முதல்வர் கிசான் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 83 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 17,500 கோடி ரூபாய் நிதியைப் பெற்றுள்ளதாக அறிவித்தார்.
  • இந்தத் திட்டம் ஆனது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வழங்குவதற்காக 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.
  • மத்திய அரசின் பிரதமர் கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 6,000 ரூபாயுடன் கூடுதலாக இந்த நிதி உதவியும் வழங்கப்பட்டது.
  • நிதி உதவி ஆனது தலா 2,000 ரூபாய் என்ற அளவில் மூன்று சம தவணைகளில் நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் வழங்கப்பட்டது.
  • வருமான வரி செலுத்திய, அரசு வேலைகளை வகித்த அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகளாக இருந்த விவசாயிகள் இந்தத் திட்டத்தின் பலனைப் பெறுவதிலிருந்து விலக்கப்பட்டனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்