மகாராஷ்டிர மாநிலத்தின் அரசானது, மராட்டியப் போர்வீரன் முதலாம் ராஜே ரகுஜி போன்ஸ்லேவின் புகழ்பெற்ற வாளை இலண்டனில் நடைபெற்ற ஏலத்தில் 47.15 லட்சம் ரூபாய்க்கு மீட்டெடுத்துள்ளது.
சேனா சாஹேப் சுபா என்பது மராட்டியப் பேரரசுடன் தொடர்புடைய உயர் இராணுவப் பதவியின் பட்டமாகும் என்பதோடு இது மிகப்பொதுவாக சாதாராவின் சத்ரபதிகளால் வழங்கப்பட்டது.
இந்தப் பட்டத்தைப் பெறுபவருக்கு ஒரு வாள் மற்றும் அங்கியும் வழங்கப்படும்.
இந்தக் குறிப்பிட்ட வாள் ஆனது, சேனா சாஹேப் சுபா என்ற பட்டத்தைப் பெற்ற ரகுஜி ராஜே போன்ஸ்லேவுக்கு சத்ரபதி ஷாஹு மகாராஜ் வழங்கிய பரிசாக இருக்கலாம்.
முதலாம் ரகுஜி போன்ஸ்லே மராட்டியப் பேரரசை ஒரிசா, பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய பல இடங்களுக்கும் விரிவுபடுத்தினார்.
அவர் 1745 முதல் 1755 ஆம் ஆண்டு வரையில் வங்காளத்தில் நடைபெற்ற சில முக்கிய இராணுவப் படையெடுப்புகளை வழி நடத்தினார்.