சென்னையில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு முதலீடு மாற்ற மாநாடு நிகழ்வின் போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து கையெழுத்திடப் பட்ட 73.53% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலீட்டு திட்டங்களாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ₹12.37 லட்சம் கோடி மதிப்புள்ள மொத்தம் 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்பதோடு இதன் மூலம் 36.52 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இவற்றில், 867 திட்டங்கள் செயல்படுத்தும் நிலையில் உள்ளன என்பதோடுமேலும் 35.11% திட்டங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தரவுகளின்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சுமார் 29.63 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டன.
தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் மாநில அரசு 18 முதலீட்டு மாநாடுகளை ஏற்பாடு செய்தது என்பதோடுஇதன் விளைவாக ₹10.43 லட்சம் கோடி மதிப்புள்ள 1,130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
காஞ்சிபுரத்தில் திறன் மேம்பாட்டு மையத்திற்காக பாரத் பயோடெக் நிறுவனத்துடனும், ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளையுடனும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
டாபர் இந்தியா லிமிடெட் தென்னிந்தியாவில் அதன் முதல் உற்பத்தி ஆலையை திண்டிவனத்தில் கட்டத் தொடங்கியது.