முதலீட்டாளர்களுக்கான புதிய UPI பண வழங்கீட்டுச் செயல்முறை
June 17 , 2025 17 days 72 0
இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஆனது இந்த முக்கியச் செயல்முறையினைச் செயல்படுத்த உள்ளது.
பங்குச் சந்தையில் பதிவு செய்யப்படாத நிறுவனங்களிலிருந்து முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.
பணம் செலுத்துவதற்கு முன்பு முதலீட்டாளர்கள் SEBI வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட சட்டப்பூர்வ இடைத்தரகர்களை எளிதாக அடையாளம் காண இது அனுமதிக்கும்.
பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஆனது பெருமளவில் முதலீட்டாளர்களை தவறான முறையில் வழி நடத்தி, முறையான அங்கீகாரம் இல்லாமல் இந்நிதிகளைச் சேகரித்து உள்ளன.
பதிவு செய்யப்பட்ட இடைத்தரகர்களின் UPI அடையாளக் குறியீடுகள் அல்லது வங்கி விவரங்களின் உண்மைத் தன்மையை நன்கு சரிபார்க்க ‘SEBI Check’ என்ற புதியதொரு கருவியையும் இது உருவாக்கி வருகிறது.
புதிய செயல்முறையின் கீழ், பயனர் பெயர் ஆனது இடைத் தரகரால் தேர்ந்தெடுக்கப் பட்ட எளிதில் படித்து புரிந்துகொள்ளும் வகையிலான மற்றும் அவர்களின் வகையை மிகவும் தெளிவாக அடையாளம் காட்டும் கட்டாயப் பின்னொட்டுடன் கூடிய பெயராக இருக்கும்.
ஒரு பங்குத் தரகருக்கான பின்னொட்டு ‘.brk’ ஆகவும், ஒரு பரஸ்பர நிதிக்கு ‘.mf’ ஆகவும் இருக்கும்.
சரி பார்க்கப்பட்ட UPI ஆனது, சுயச் சான்றளிக்கப்பட்ட சிண்டிகேட் (கூட்டு நிறுவனம்) வங்கியின் பெயருடன் இணைந்து “@valid” என்ற தனித்துவமான மற்றும் பிரத்தியேக அடையாளங் காட்டியாக இருக்கும்.
சரிபார்க்கப்பட்ட UPI ஆனது, SEBI வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட இடைத் தரகர்களால் பணம் வசூலிப்பதற்காக மட்டுமே பிரத்தியேகமாக இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகத்தினால் (NPCI) ஒதுக்கப்படும்.
NPCI என்பது நம் நாட்டில் சில்லறைக் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வு அமைப்புகளை இயக்கவதற்கான ஒரு முதன்மை அமைப்பாகும் என்பதோடு இது அதற்கென ஒரு UPI தளத்தைச் சொந்தமாகக் கொண்டு செயல்படுகிறது.